அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha) படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த டிரெய்லரை பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் டேக் செய்திருந்தார் அக்ஷய் குமார். தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து படத்தின் டிரெய்லரைப் பாராட்டி மோடி, ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


