பல புதிய படங்கள் வெளிவருவதால் பாகுபலி 2 படத்தின் வசூல் மெல்ல மெல்ல தனது முடிவை நெருங்கி வருகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ஹிந்தி பாகுபலி 2 படம் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு ஹிந்திப் படமும் இந்தியாவில் ரூ. 400 கோடி கூட வசூலித்தது கிடையாது. இந்நிலையில் ஹிந்தி பாகுபலி 2-வின் வசூல் ரூ. 500 கோடியைத் தாண்டி மகத்தான சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பாகுபலி 2 ஹிந்தி படத்தின் வசூல் கடந்த ஒரு வாரத்தில் பாதியாகக் குறைந்துள்ளது. புதிய படங்களின் வரவாலும் பள்ளிகள் திறந்துவிட்டதாலும் பாகுபலி 2 படம் மெல்ல மெல்ல திரையரங்கிலிருந்து வெளியேறும் காலத்தை நெருங்கி வருகிறது.
சினிமா விமரிசகர் தாரன் ஆதர்ஷ், பாகுபலி 2 படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்டுள்ளார்.
பாகுபலி 2 (ஹிந்தி) கடந்த ஒருவார வசூல்
வெள்ளி: 72 லட்சம்
சனி: ரூ. 1.03 கோடி
ஞாயிறு: ரூ. 1.35 கோடி
திங்கள்: ரூ. 66 லட்சம்
செவ்வாய்: ரூ. 60 லட்சம்
புதன்: ரூ. 54 லட்சம்
வியாழன்: ரூ. 45 லட்சம்
பாகுபலி 2 (ஹிந்தி) வசூல்
முதல் வாரம்: ரூ. 247 கோடி
2-ம் வாரம்: ரூ. 143.25 கோடி
3-ம் வாரம்: ரூ. 69.75 கோடி
4-ம் வாரம்: ரூ. 29.40 கோடி
5-ம் வாரம்: ரூ. 11.78 கோடி
6-ம் வாரம்: ரூ. 5.35 கோடி
மொத்த வசூல்: ரூ. 506.53 கோடி
பாகுபலி 2 (ஹிந்தி) இந்தியாவில் நிகழ்த்திய சாதனைகள்
ரூ. 100 கோடி: 3-வது நாள்
ரூ. 200 கோடி: 6-வது நாள்
ரூ. 300 கோடி: 10-வது நாள்
ரூ. 400 கோடி: 15-வது நாள்
ரூ. 450 கோடி: 20-வது நாள்
ரூ. 475 கோடி: 24-வது நாள்
ரூ. 500 கோடி: 34-வது நாள்
பாலிவுட்டில் சாதனை நிகழ்த்திய படங்கள்
முதல் ரூ. 100 கோடி படம்: கஜினி (2008)
ரூ. 200 கோடி: 3 இடியட்ஸ் (2009)
ரூ. 300 கோடி: பிகே (2014)
ரூ. 400 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
ரூ. 500 கோடி: பாகுபலி 2 (ஹிந்தி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


