பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பெங்களூரில் உதயமாகியுள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்குகள்! (படங்கள்)

கர்நாடகாவில் முதல்முறையாக நுழைந்துள்ள சத்யம் சினிமாஸ், பெங்களூரில் மேலும் பல திரையரங்குகளைத் திறக்க முடிவு...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

எழில்

சென்னையின் அடையாளங்களில் ஒன்று, சத்யம் திரையரங்கம். இப்போது தனது மற்றொரு கிளையை பெங்களூரிலும் ஆரம்பித்துள்ளது சத்யம் சினிமாஸ் நிறுவனம். 

பெங்களூரில் சத்யம் சினிமாஸின் 5 திரையரங்குகள் கொண்ட மல்டிபிளெக்ஸ் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மகாடி சாலையில் உள்ள ஜிடி வேர்ல்ட் மாலில் தி சினிமா என்கிற பெயரில் தனது மற்றொரு கிளையை ஆரம்பித்துள்ளது சத்யம் சினிமாஸ். சர்வதேச அளவில் தற்போது கடைப்பிடிக்கப்படும் அத்தனை நவீனத் தொழில்நுட்பங்களும் இத்திரையரங்குகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

கர்நாடகாவில் முதல்முறையாக நுழைந்துள்ள சத்யம் சினிமாஸ், பெங்களூரில் மேலும் பல திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. பிவிஆர், ஐனாக்ஸ், சினிபொலிஸ், ஸ்வரூப் என முன்னணி திரையரங்குகள் அங்கு மக்களின் வரவேற்பை ஏற்கெனவே பெற்றிருந்தாலும் புதிய வசதிகளைக் கொண்டு ரசிகர்களை ஈர்க்கமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது சத்யம் சினிமாஸ். 

தி சினிமா திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம்: கோல்ட் கிளாஸ் டிக்கெட்டுகள், ரூ. 170 முதல் ரூ. 290 வரை இருக்கும். எலைட் டிக்கெட்டுகள் குறைந்தபட்சம் ரூ. 100. ஏற்கெனவே கேரளாவில் திருவனந்தபுரத்திலும் தெலங்கானாவில் வாரங்கலிலும் தனது திரையரங்குகளை ஆரம்பித்துள்ள சத்யம் சினிமாஸ், தென்னிந்தியாவில் மேலும் 15 முதல் 20 திரையரங்குகளைத் திறக்க முடிவுசெய்துள்ளது.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.