பத்திரிகையாளர் சஞ்சய பாரு எழுதிய தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகம் தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சஞ்சய் பாரு அவருடைய ஊடக ஆலோசகராக இருந்தார். அப்போது பார்த்த, கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது.
மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பதால் பிரதமரையும் பிரதமரின் அலுவலகச் செயல்பாடுகளையும் நேரடியாகக் கண்டு அதன்படி நிகழ்வுகளை விவரித்துள்ளார் சஞ்சய பாரு. மன்மோகன் சிங் தனது ஆட்சியை எப்படிக் கையாண்டார்? முக்கியமான பிரச்னைகளின்போது எவ்வாறு செயல்பட்டார் என்கிற பல முக்கியமான தகவல்களைக் கொண்ட புத்தகம் அது. இது தமிழில், தற்செயல் பிரதமர் என்கிற பெயரிலும் வெளிவந்துள்ளது.
புத்தகம் வெளியான பிறகு பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகவுள்ளது. புத்தகத்தின் தலைப்பையே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அனுபம் கெர், மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அன்சல் மேத்தாவின் திரைக்கதையை முன்வைத்து விஜய் ரத்னாகர் குட்டே இயக்கவுள்ளார். அடுத்த வருடம் டிசம்பரில் இந்தப் படம் வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


