இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. ஆனால் இதை எதிர்த்து மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ கிடைத்தது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்துள்ளார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்துள்ளார். பலவருடங்களுக்குப் பிறகு இளையராஜா, வைரமுத்து ஆகிய இருவரும் ஒரே படத்தில் பணியாற்றியுள்ளார்கள். இந்தப் படத்தில் ரோட்டுல வண்டி ஓடுது என்கிற பாடலை இளையராஜா பாடியுள்ளார். அதேபோல படத்தின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.
பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குநர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இம்மூன்று படங்களும் ரம்ஜான் விடுமுறை வெளியீடாக ஜுன் 23 அன்று வெளிவருகின்றன.
பாகுபலி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சிறிய பட்ஜெட் படங்களே கடந்த சில வாரங்களாக வெளிவந்தன. இந்நிலையில் இந்த மூன்று படங்களும் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் பலத்த போட்டி போட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மயங்கி விழுந்து பலி

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


