லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சண்டகோழி 2 படம் கடந்த வருடம் ஆரம்பமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தை ஆரம்பிப்பதற்குப் பதிலாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கொண்டு புதிய படத்தைத் தொடங்க இருந்தார் இயக்குநர் லிங்குசாமி. உடனே, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதனையடுத்து, சண்டகோழி 2 விவகாரம் தொடர்பாக விஷால் - லிங்குசாமி இடையே மோதல் எழுந்தது. பிறகு இருவரும் சமரசம் ஆனதால், சண்டகோழி 2 படத்தைத் தொடங்க முடிவெடுத்தார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி - விஷால் ஆகிய இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.
இந்நிலையில் சண்டகோழி 2 படம் வருகிற ஆகஸ்ட் 31 முதல் ஆரம்பமாகும் என இயக்குநர் லிங்குசாமி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.
பொங்கல் அன்று இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


