சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தான் முதலில் நாத்திகராக இருந்ததாகவும் தற்போது புத்த மதத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். ‘எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல. வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்கள் கற்றுவருவதால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன்’ என்றார்.
இதையடுத்து மகளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல். அதில் அவர் கூறியதாவது: ஹாய் அக்ஷு, நீ மதம் மாறிவிட்டாயா? அப்படியெனில் நான் உன்னை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத். ஆகஸ்ட் 10 அன்று இந்தப் படம் வெளிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


