நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலை, பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப் பாதையை நடிகர் சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகள் பிரகாசம் சாலைக்குச் செல்வதற்குச் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. அந்தப் பொதுப்பாதையை அதிகாரிகள் சட்ட விரோதமாக நடிகர் சங்கத்திற்கு பட்டாப் பதிவும் செய்து கொடுத்துள்ளனர். முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகின்றனர். எனவே, நடிகர் சங்கம் சார்பில் கட்டடம் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் கட்டட அனுமதிக்கான ஆவணங்கள் மற்றும் வரைபடத்தைத் தாக்கல் செய்தனர். அவற்றைப் பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: நடிகர் சங்க கட்டடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்கு ஆணையராக வழக்குரைஞர் கே.இளங்கோவை நியமிக்கிறோம். கிண்டி தாலுகாவுக்கு உள்பட்ட கணக்கெடுப்பு உதவி இயக்குநர், வட்டாட்சியர் ஆகியோர் ஆணையருக்கு இடத்தை ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும். மேலும் வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சியில் இருந்தும் தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்க இடத்தை ஆய்வு செய்து, மே 29-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என நடிகர் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த ஆய்வுக்கு பின் கே.இளங்கோ தாக்கல் செய்த அறிக்கையில், 'சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிலநாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் நிலையம் இருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் அஞ்சல் நிலையம், பொது சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, வழக்கில் தலைமை அஞ்சல் துறை தலைவரை எதிர்மனுதாரராக இணைத்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க கட்டுமானப் பணிகளைத் தொடர 2 வாரத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


