ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த வாரம் வெளியான படம் - மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக மட்டும் நடிக்கவில்லை. கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் எனப் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரித்துள்ளார்.
இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெற்றதால் இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது படத்தயாரிப்பாளரும் இயக்குநருமான சுந்தர்.சி கூறியதாவது:
நகரங்களில் மட்டும்தான் மீசைய முறுக்கு நல்ல வசூல் பெறும் என நினைத்தோம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலைப் பெற்று படம் ஹிட் ஆகியுள்ளது. முதல் 250 திரையரங்குகளில்தான் படத்தை வெளியிட்டோம். இப்போது அந்த எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. கேரளாவில் திரையரங்குகள் கிடைக்க முதலில் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து நிறைய அழைப்புகள் வருகின்றன.
நானும் நிறைய படங்கள் இயக்கியுள்ளேன். நடித்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு வெற்றியைச் சந்தித்ததில்லை. கடந்த வாரம் வெளியான மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய இரு படங்களும் மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளது. நல்ல படம் வந்தால் எவ்வளவு செலவானாலும் திரையரங்குகளுக்கு வருவோம் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள். ஜிஎஸ்டி போல எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


