மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேரள நடிகை வழக்கு: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு!

கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2017, 5:12 am

கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப்பைக் காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். திலீப்பின் உத்தரவின்பேரிலேயே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதாக குற்றம்சாட்டிய போலீஸார், அவர் மீது கடத்தல் சதி, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனிடையே, தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் திலீப், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அங்கமாலி மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை அங்கமாலி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், அவரது போலீஸ் காவலை வரும் 25-ஆம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் சார்பில் கடந்த திங்கள்கிழமை புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சுதீந்திர குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திலீப் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், 'திலீப்புக்கும், இந்தக் கடத்தலுக்கு தொடர்பு இல்லை. இந்த வழக்கில் வேண்டுமென்றே அவர் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்' எனக் கூறினார். ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த அரசு தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் போலீஸ் தரப்பு சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார். 

இந்த மனு இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.