விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
நேற்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரன், விஜய் சேதுபதியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நேற்று இரவு 'விக்ரம் வேதா' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் திரையரங்கில் பார்த்தேன். இப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவருக்கும் எனது வாழ்த்துகள். கதை சொன்ன விதமும் நடிகர்களைக் கையாண்ட விதமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.
மாதவன், விஜய் சேதுபதி இருவரும் நடிப்பில் அசால்டு பண்ணி இருக்காங்க. (நீ நம்பின கடவுள் உன்னை கைவிட்டாலும், உன் உழைப்பு உன்னை கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஓர் உதாரணம்..)
இன்றைய தலைமுறை நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய்சேதுபதி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நடிப்பில் தன்னை வியக்க வைத்த மற்றொரு நடிகர் தனுஷ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


