விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகிவருகின்றன. இது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி, ஓவியா ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராக ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஓவியாவுக்கு ஆதரவானது போன்ற, எந்தப் பெயரும் குறிப்பிடாமல் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. ஆனால் அது சமீபத்திய சூழலுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. ட்விட்டரில் அவர் கூறியதாவது:
எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களைக் கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனமான செயலாகும் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


