இந்தியாவில் நாள்தோறும் பல்வேறு விதமான உபாதைகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களது நோயை குணப்படுத்தும் விதமான மருந்துகளை அளிக்காமல், மேலும், மேலும் அந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும் விதமான மருந்துகளை அளித்து, தொடர்ந்து மக்களை மருத்துவமனைகளிலேயே அமிழ்த்தி அவர்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை மருந்து, மாத்திரைகளுக்காக அபகரிக்கும் எண்ணத்துடன் அயல்நாட்டு மருந்துக் கம்பெனிகள் இப்படி ஒரு சதித் திட்டத்துடன் களமிறங்கினால் அரசு அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லதில்லை. பிற நாடுகளில் விற்கத் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளை இந்தியாவில் மட்டும் விற்க முடிவதின் பின்னிருக்கும் அரசியல் சூட்சுமம் என்ன? ஏன் அரசு இப்படி மக்களின் உயிரோடு விளையாட வேண்டும்? எனவே பிரதமர் மோடி அவர்கள் இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனும்படியாக அவர் கடிதம் நீள்கிறது.