முன்னதாக அகிலுக்கும், தொழிலதிபர் GSK வின் பேத்தியும், ஹைதராபாத்தின் சிறந்த ஃபேஷன் டிசைனர்களில் ஒருவருமான ஸ்ரீயா பூபாலுக்கும் நடந்து முடிந்திருந்த திருமண நிச்சயதார்த்தம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அந்தத் திருமண முறிவுக்கான காரணங்கள் அறியப் படாத நிலையில் தற்போது திடீரென டகுபதி வெங்கடேஷ் மகளுக்கும், அகிலுக்கும் திருமணப் பேச்சு இருக்கிறது. நாகார்ஜுனா, லஷ்மி திருமண முறிவால் பிளவு பட்டிருந்த இரு குடும்ப உறவுகளும் இந்தத் திருமணம் மூலம் சீராகவிருக்கின்றன என்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த வதந்திகளை முறியடிக்கும் விதமாக இரு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தவர்களும் அவ்விசயத்தை கடுமையாக மறுத்திருக்கிறார்கள்.