கேரள நடிகை காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் போலீஸ் காவல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரள நடிகை, கொச்சி அருகே படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நடிகையை காரில் கடத்திய கும்பல், காரிலேயே 2 மணி நேரம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது. பின்னர் பாதிவழியில் நடிகையை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின்பேரில், நடிகர் திலீப் கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திலீப்பை 2 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அங்கமலேவில் இருக்கும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி அனுமதியளித்திருந்தது. அதன்படி, திலீப்பின் போலீஸ் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அங்கமலே நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திலீப் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நடிகர் திலீப்பை மேலும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை பரிசீலித்துவிட்டு நீதிபதி கூறும்போது, திலீப்பை காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு மேலும் 2 நாள்கள் அவகாசம் அளித்தார்.
இந்நிலையில் திலீப்பின் ஜாமின் மனுவை அங்கமலே நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதனால் திலீப்பை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


