மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து!

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக...

News image
Updated On :12 ஜூலை 2017, 9:46 am

தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 7-இல் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் மீதான நற்பெயரை சிதைக்கும் வகையில் முன்னணி நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீப்ரியா, விவேக், விஜயகுமார், இயக்குநர் சேரன், அருண் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர். இது தொடர்பாக, உதகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ மரிய சூசை என்பவர் உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 8 நடிகர்களையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இவர்கள் நேரில் ஆஜராகாத காரணத்தால் 8 நடிகர்களுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து, மே 23-ஆம் தேதியன்று நீதிபதி செந்தில் குமார் ராஜவேல் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், உதகை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என, வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீட்டார். இதை ஏற்ற நீதிபதி எஸ்.விமலா, உதகையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பத்திரிகையாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மறு உத்தரவு வரும்வரை பிடியாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.