டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் வேலைக்காரன்!

சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'வேலைக்காரன்'

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:03 am

உமா ஷக்தி.

சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர்  வருகின்ற தொழிலாளர்  தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது.

ஒவ்வொரு மனிதனின்  வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும்  உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள்.   அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால்  கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.  இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சிவகார்த்திகேயன் - ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான 'ரெமோ' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன்  இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிரிபார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.  

சிவகார்த்திகேயனின்  பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து: 'கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உழைப்பாளர்களின் மகிமையை பற்றி இந்த 'வேலைக்காரன்'  எடுத்து சொல்லும்'.

வேலைக்காரன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி  (ஆகஸ்ட் 25) ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தரமான கதை, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, சிறந்ததொரு பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த வேலைக்காரன் திரைப்படம், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகளை உள்ளடக்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது  மேலும் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.