டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தின் கதை!

ஒரு சராசரி மனிதன் எவ்வாறு  அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான்  'எமன்' படத்தின் கதை

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

உமா ஷக்தி.

ஒரு சராசரி மனிதன் எவ்வாறு  அரியணையில் அமர முயற்சி செய்கிறான் என்பது தான்  'எமன்' படத்தின் கதை  என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர் 

விஜய் ஆண்டனி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'எமன்'. அரசியலை மையமாக கொண்டு  ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த 'எமன்' திரைப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும்  இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் 'எமன்'  திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

'ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும்  கதை எழுதுவேன். அதற்கு பிறகு தான் அதை எப்படி காட்சி படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து சிந்திப்பேன். இந்த 'எமன்' படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, சிம்மாசனத்தில்  அமர முயற்சி செய்கின்றான். அதில் அவன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பது தான் 'எமன்' படத்தின் ஒரு வரி கதை. தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, 'எமன்' படத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் எங்களின் 'எமன்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் அதை உறுதி செய்வார்கள்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.