2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஏக்கத்துடன் பாடினேன்: வான் வருவான் பாடிய அனுபவம் பற்றி பாடகி சாஷா திருப்பதி

இப்பாடலை மணி ரத்னம் சார் அற்புதமாக காதல் உணர்வுடன் படமாக்கியுள்ளார்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

எழில்

மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

காற்று வெளியிடை படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் புதிய படங்கள் வெளியாகும். ஆனால் காற்று வெளியிடை அதற்கு ஒருவாரத்துக்கு முன்பே வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் வான் வருவான் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து பாடகி சாஷா திருப்பதி ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஒரு மாதத்துக்கு முன்பு பாடல் படமாக்கப்பட்டது. மிகவும் தீவிரத்துடனும் ஏக்கத்துடனும் பாடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. இப்பாடலை மணி ரத்னம் சார் அற்புதமாக காதல் உணர்வுடன் படமாக்கியுள்ளார் என்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த சாஷா, காஷ்மீரில் பிறந்தவர். கனடாவில் பள்ளிப்படிப்பைப் பயின்றவர். தமிழில் பாடுவது குறித்து அவர் கூறியதாவது: எந்த மொழியிலும் பாடுவதற்கும் நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். அதேபோல உங்களுக்கு நல்ல ஆசான்களும் இருக்கவேண்டும். நான் தமிழைச் சரியாக உச்சரிக்கிறேன் என்றால் என்னுடைய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், என்ஜினியர்கள் போன்றோர் முக்கிய காரணம். பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொள்வேன். பாடலாசிரியர்களிடம் உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். முக்கியமாக ல, ள, ழ போன்ற எழுத்துகளை எப்படி உச்சரிப்பது என்று கற்றுக்கொண்டு அதன்படி பாடுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.