'பைரவா' வெற்றி: படக்குழுவினருக்கு விஜயின் 'சர்ப்ரைஸ்'!
தனது நடிப்பில் வெளிவந்துள்ள 'பைரவா' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்தப் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசு அளித்து நடிகர் விஜய் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


சென்னை: தனது நடிப்பில் வெளிவந்துள்ள 'பைரவா' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்தப் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசு அளித்து நடிகர் விஜய் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ‘பைரவா’. படம் வெளிவந்து இரண்டு வாரங்களை கடந்த பின் இப்பொழுதும் திரையரங்குகளில் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவா படக்குழுவினருக்கு நடிகர் விஜய் 'இன்ப அதிர்ச்சி' ஒன்றை கொடுத்துள்ளார்.
அதன்படி இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் விஜய் தனது சொந்த செலவில் தங்க செயின் மற்றும் மோதிரம் பரிசளித்துள்ளார். இதனை எதிர்பாராத படக்குழுவினர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...