மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

முதல் நாளிலேயே வெற்றியைக் கொண்டாடிய போகன் படக்குழு! (படங்கள் & வீடியோ)

முதல் நாளன்றே இதன் வெற்றிவிழாக் கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:53 am

எழில்

அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதன் மூலம், தயாரிப்பாளராகவும் கவனம் பெறுகிறார் பிரபுதேவா. சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்ட "தேவி' வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து பிரபுதேவா தயாரித்துள்ள படம் "போகன்.' "ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லஷ்மண், ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளது. "தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார் அரவிந்த் சாமி.

போகன் படம் நேற்று வெளியானது. முதல் நாளன்றே இதன் வெற்றிவிழாக் கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. திரையின் முன்பு படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டினார் ஜெயம் ரவி. பிறகு படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Story image
Story image
Story image
Story image
YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.