சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - டியுப்லைட். வழக்கமாக சல்மான் கானின் படங்களில் வசூலில் ரகளை செய்யும். அதேபோல இந்தப் படமும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களில் வெளிவந்த சல்மான் கான் படங்களில் முதல் மூன்று நாள்களில் குறைந்த வசூலை அடைந்த படம் என்கிற நிலைமை டியூப்லைட் படத்துக்கு ஏற்பட்டது. முதல் 3 நாள்களில் ரூ. 65 கோடி வசூலித்தது.
ரம்ஜான் சமயத்தில் வெளியான சல்மான் படங்களின் வசூலை பாலிவுட் விமரிசகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டார்.
2011: பாடிகார்ட் ₹ 88.75 கோடி [புதன் - ஞாயிறு)
2012: ஏக் த டைகர் ₹ 100.16 கோடி [புதன் - ஞாயிறு]
2014: கிக் ₹ 83.83 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2015: பஜ்ரங்கி பைஜான் ₹ 102.60 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2016: சுல்தான் ₹ 105.53 கோடி [புதன் - ஞாயிறு]
2017: #டியூப்லைட் ₹ 64.77 கோடி [வெள்ளி - ஞாயிறு]
முதல்வாரம் இந்தப் படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. கடைசியில் ஒட்டுமொத்தமாக ரூ. 121 கோடி வசூலித்து தோல்வி நிலையை அடைந்தது. விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்குப் படம் விற்கப்பட்டதால் பலரும் சல்மான் கானிடம் நஷ்டம் குறித்து முறையிட்டார்கள். இதையடுத்து டியூப்லைட் படத் தோல்வியால் பாதிப்படைந்த விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்க சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, ரூ. 35 கோடியை நஷ்டஈடாக வழங்கவுள்ளார். ஜூலை மாதம் இறுதியில்லேயே நஷ்டஈடு கொடுக்க முடிவு செய்தார் சல்மான் கான். ஆனால் 2017 ஐஐஎஃப்ஏ விருதுகள் நிகழ்ச்சியில் அப்போது மும்முரமாக இருந்ததால் தற்போது நஷ்டஈடு வழங்க முன்வந்துள்ளார். சல்மான் கானின் இந்த நடவடிக்கையால் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலையில் வேகத்தடை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


