விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிந்து மாதவி ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகிய இருவரையும் அதற்கு அடுத்த நிலையிலும் வைத்து தன்னுடைய நடவடிக்கைகளை வெளிப்படுத்திவருகிறார்.
நேற்று தனக்குப் பிடித்த போட்டியாளர்களை வரிசைப்படுத்தப் போகிறேன் என கேமரா முன்பு மட்டும் சொன்ன பிந்து மாதவி, முதல் இடத்தை ஓவியாவுக்கு வழங்கினார். கடைசி இடங்களை காயத்ரி ரகுராம், ஜூலிக்கு வழங்கினார். இது புரியாததால் காயத்ரி ரகுராம், இந்த வரிசை குறித்து சக்தியிடம் விவாதித்ததும் ஒளிபரப்பானது.
போட்டியில் நுழையும் முன்பு கமலிடம், தனக்கு ஓவியா சவாலாக இருப்பார் என்று கூறிய பிந்து மாதவி, நாமினேஷன் பட்டியலில் வெளியேற வேண்டியவர்களாக காயத்ரி மற்றும் ஜூலியைத் தேர்வு செய்து ஆச்சர்யத்தை உண்டாக்கினார்.
இன்றைய நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமிடம், பரணி சுவரேறிக் குதித்தபோது ஏன் யாரும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை? நீங்கள் எல்லோரும் அவரைத் தனிமைப்படுத்தியதால்தான் அதுபோன்று செய்ய முயன்றார்! அப்போது தலைவராக இருந்தது நீங்கள்தானே, எனில் நீங்கள்தான் அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்கிற கேள்விகளைக் கேட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதியதொரு பரபரப்பு உண்டாகியுள்ளது.
வெளியிலிருந்து அனைத்து நிகழ்வுகளையும் பார்த்த ஒருவர் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய சுவாரசியம் உண்டாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


