பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், நேற்று வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க இருந்து இந்தப் படத்துக்கு விமரிசனங்கள் குவிந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைவரும் படத்தை ஆஹோஓஹோ எனப் பாராட்டுகிறார்கள். இந்திய சினிமாவின் மகத்தான படம் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
முதல் நாளன்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள பாகுபலி 2, தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 11 கோடியை அள்ளியுள்ளது. இத்தனைக்கும் பல இடங்களில் அதிகாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தணிக்கையில் யு/ஏ கிடைத்துள்ளதால் இந்தப் படத்துக்கு வரிச்சலுகை கிடையாது. சென்னையில் மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 91 லட்சம் வசூல் கிடைத்துள்ளது. இதில் தமிழ் - ரூ. 76 லட்சம், தெலுங்கு ரூ. 14 லட்சம், ஹிந்தி - 1 லட்சம்) சமீபத்தில் வெளியான கபாலி, தெறி, பைரவா ஆகிய படங்களுக்குப் பிறகு சென்னையில் முதல் நாளன்று அதிக வசூலை அள்ளிய படம் என்கிற பெருமையும் கிடைத்துள்ளது.
அடுத்த மூன்று நாள்களும் விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாட்டில் முதல் நான்கு நாள்களில் குறைந்தபட்சம் ரூ. 40 கோடி வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


