சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடியைத் தாண்டிய பாகுபலி 2 முதல்நாள் வசூல்!

சுல்தான், டங்கல் என இரு படங்களின் வசூலையும் தாண்டி சாதனை படைத்து வருகிறது. இனி வரும் இந்தியப் படங்கள், பாகுபலி 2-வின் வசூலை...

News image
Updated On :29 ஏப்ரல் 2017, 10:15 am

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், நேற்று வெளியாகியுள்ளது. 

வசூலில் இந்தப் படம் பல சாதனைகளைச் செய்துள்ளது. டப்பிங் படமாக ஹிந்தியில் வெளியாகியுள்ள பாகுபலி 2 முதல் நாளன்று சல்மான் கான் நடித்த சுல்தான், அமீர் கான் நடித்த டங்கல் என வசூலில் சாதனை செய்த இரு படங்களையும் மிஞ்சியுள்ளது. முதல் நாளில் சுல்தான் ரூ. 36. 54 கோடியையும் டங்கல் ரூ. 29.78 கோடியையும் அள்ளியது. ஆனால் இந்த இரு படங்களையும் விட பாகுபலி 2 அதிக வசூல் எடுத்து சாதனை செய்துள்ளது. முதல் நாளன்று ஹிந்தி பாகுபலி 2, ரூ. 40 கோடி வசூலித்துள்ளது.

தெலுங்கில் இந்தப் படம் ரூ. 53 கோடியை வசூலித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முதல் நாளில் அதிக வசூல் கண்ட படம் என்கிற சாதனையைச் செய்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் மட்டும் முதல் மூன்று நாள்களில் நூறு கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 11 கோடி வசூல் கிடைத்துள்ளது. 

அதிகாரபூர்வமாக இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் முதல் நாளன்று இந்தியாவில் மட்டும் ரூ. 145 கோடி கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது. இந்திய அளவில் இது ஒரு சாதனை. இனி வரும் இந்தியப் படங்கள், பாகுபலி 2-வின் வசூலை முறியடிக்கவே முயற்சி செய்யவேண்டும். அந்தளவுக்கு அதன் வசூல் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.