ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அறிவிப்புகள், வாழ்த்துகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நயன்தாரா பிறந்தநாள்! (படங்கள்)

இந்த வருட பிறந்தநாள் நயன்தாராவுக்கு மறக்கமுடியாத ஒன்று...

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:44 pm

சநகன்

நயன்தாராவின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் நயன்தாரா மையக்கதாபாத்திரத்தில் நடிக்கும் இரு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சிவகார்த்திகேயன் படத்தில் நடித்துவரும் நயன்தாராவுக்கு அதன் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளன்று தான் படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் போன்ற படம் தொடர்புடைய விளம்பர அம்சங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது இந்தக் கெளரவம் நயன்தாராவுக்குக் கிடைத்துள்ளது. நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் படத்துக்கு அறம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று, நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

Story image

மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. கோபி நயினார் இயக்கும் கதாநாயகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தின் விளம்பரங்கள்தான் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளன.  

பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. கொலையுதிர் காலம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், த்ரில்லர் வகையைச் சார்ந்ததாகும். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை பாலாஜி பிலிம்ஸும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. 

Story image

டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், அஜய் ஞானமுத்து. இவருடைய அடுத்தப் படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்துக்கு இமைக்கா நொடிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதவிர, சற்குணம் உதவி இயக்குநர் தாஸ் இயக்கும் டோரா, மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என முக்கியமான படங்களில் நயன்தாரா நடித்துவருகிறார்.

பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா படப்பிடிப்பில் இருந்தார் நயன்தாரா. படப்பிடிப்புத் தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நயன்தாராவின் காதலராகச் செய்திகளில் அடிபடும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அவருடைய அந்தப் புன்னகையைப் பார்க்கும்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அறிவீர்கள். இந்த நாள் என்னுடைய சிறந்தநாள் என்று ட்வீட் செய்து இருவரும் இணைந்துள்ள ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார். 

மொத்தத்தில் இந்த வருட பிறந்தநாள் நயன்தாராவுக்கு மறக்கமுடியாத ஒன்று.

Story image

.  

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.