ரன்வீர் சிங்கின் துரந்தர்: தி ரிவென்ஞ்ச் திரைப்படம் வெறும் 5 நாள்களில் புஷ்பா 2 படத்தின் (ஹிந்தி) ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்து அசத்தியுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.
முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்துக்கான சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், படத்தின் வசூல் சற்று தளர்ந்த நிலையில், மீண்டும் படத்தில் வசூல் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், துரந்தர்: தி ரிவென்ஞ்ச் படம் நேற்று வசூலித்த ரூ. 65 கோடியுடன் சேர்த்து மொத்தமாக ஹிந்தியில் மட்டும் ரூ. 519.12 வசூலீட்டியுள்ளது.
இதன்மூலம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஹிந்தி வெளியீட்டில் ஒட்டுமொத்த வசூலையும் வெறும் 5 நாள்களில் முறியடித்துள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் இந்திய அளவில், ரூ. 620 கோடியும், உலகளவில் ரூ. 830 கோடியும் வசூலித்துள்ளது.
ஹிந்தியில் முதல் 5 நாள்களில் அதிக வசூலீட்ட படங்கள்
துரந்தர் 2 - ரூ. 430 கோடி (முதல் நான்கு நாள்களில்)
புஷ்பா 2 - ரூ. 425 கோடி
பதான் - ரூ. 351 கோடி
ஜவான் - ரூ. 346 கோடி
ஸ்த்ரீ 2 - ரூ. 291 கோடி
Summary
Ranveer Singh's Dhurandhar: The Revenge has entered the Rs 500 crore club domestically in five days, and has surpassed the Rs 800 crore mark worldwide. It has also outpaced Allu Arjun's Pushpa 2: The Role in the Hindi market. Check the latest box office collection report here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்த துரந்தர் தி ரிவெஞ்ச்..! பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா?
துரந்தர் 2! இவரால் மட்டுமே ரூ. 500 கோடி கிடைக்கும்: ரன்வீர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



