குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விடாமுயற்சி புதிய அப்டேட்!

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் இன்று(ஆக. 16) மதியம் வெளியாக இருக்கிறது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 5:45 am

DIN

விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் இன்று(ஆக. 16) வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜொனாதன் மோஸ்டோ இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அதிரடி திரில்லர் திரைப்படமான 'பிரேக்டவுன்' படத்தின் தழுவலாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கலாம் என்ற தகவலும் முதலில் வெளியாகின. இந்தப் படத்தில் கர்ட் ரஸ்ஸல் , ஜேடி வால்ஷ், கேத்லீன் குயின்லன் ஆகியோர் நடித்திருந்தனர். 

அதேபோல, கார் சேசிங் காட்சிகள், ஒரு சாலையில் தொடர்ச்சியாக கதை நகருவது போலவும், தொடர்ந்து வெளியான நடிகர், நடிகைகளின் போஸ்டர் காட்சிகளும் கிட்டத்தட்ட பிரேக் டவுன் படத்தில் மறு உருவாக்கமாக்க இருக்கலாம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இன்று மதியம் 1.09 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது, படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்கான வெளியீட்டு தேதியாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.