உலகின் எந்த மூலையாக இருந்தால் என்ன, மனித உணர்வுகள ஒன்றுதான். நம் அனைவரின் வலிகள், கனவுகள் ஆசைகள், பிரச்னைகள், போராட்டங்கள் என எல்லாமே பொதுவான உணர்விலிருந்து எழுவதுதான். ண்ணீரும் பிரியமும் சந்தோஷமும் பொதுவானவை. இத்தகைய உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மன எழுச்சி, தவிர உணர்வு நிலைமாற்றும் திரை அனுபவத்தைக் பெற விரும்பியே இத்திரைப்படங்களை அதிகமாக பார்க்கிறேன். அகலத் திரையில் ஆயிரம் பேருடன் அமர்ந்து படங்கள் பாரத்தது தைஅனுபவத்தை மேலும் செழும ஆக்கியது. ஐந்து நாட்களில் இருபத்தி இரண்டு படங்கள் பார்த்தேன். திரைக்குள் வாழ்ந்தேன், திரையரங்குகளிலேயே வசித்தேன் என்றும் சொல்லலாம். காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.30 வரை திரை அரங்குக்குள் வசித்தேன் என்றும் சொல்லலாம். இடையில் உண்பதும் உறங்குவதும் சிறிது. இப்படி பித்தாக படம் பார்ப்பவர்களின் மொத்தக் கூட்டம் தான் கோவாவில் காணக் கிடைத்தது. சிலர் பத்து நாட்கள் முழுவதும் தங்கி படம் பார்க்கிறார்கள். சிலர் சுருக்கமாக கொடுக்கப்பட்ட கதைகளை முன்னரே படித்து, பிடித்த படங்களை மட்டும் பார்த்து, மற்ற நேரங்களில் அரங்குகளில் நடைபெறும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில், கலந்துரையாடல்களில் பங்கு கொண்டனர். நம் தமிழ் சினிமா இயக்குநர் வெற்றிமாறன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்தார். ஷேகர் கபூர், அனுராக் காஷ்யப், அஞ்சலி மேனன் போன்ற திரைப்பட இயக்குநர்கள் திரை ரசிகர்களாக ஆர்வமுடன் பங்கு கொண்டு கோவா திரை விழாவை ரசித்தனர்.