ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதல் மூன்று நாள்களில் ரூ. 3300 கோடி வசூல் செய்த ஜுராசிக் வேர்ல்ட்!

இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு - ரூ. 960 கோடி; இணை தயாரிப்பாளர்- ஸ்பீல்பெர்க்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:46 am

சநகன்

சென்ற வாரம் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படம் வசூலில் பெரிய சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான முதல் மூன்று நாள்களில் (வீக்எண்ட்) மட்டும் ரூ. 3363 கோடியை (524 மில்லியன் டாலர்) வசூலித்துள்ளது.

இது ஹாரி பாட்டர் பாகம் 2 படத்தின் வசூலை விடவும் மிகவும் அதிகமானதாகும். ஹாரிபாட்டர் பாகம் 2, முதல் மூன்று நாள்களில் 494 மில்லியன் டாலர் வசூல் செய்தது அப்போது சாதனையாக இருந்தது.

மூன்றில் இரண்டு பங்கு வசூல் வட அமெரிக்காவில் வெளியான 4, 273 திரையரங்குகள் மூலம் கிடைத்துள்ளது. இங்கு 208 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. சீனாவில் மட்டும் 130 மில்லியன் டாலர் வசூலாக கிடைத்துள்ளது.

இயக்குநர் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர். இவர் ஜுராசிக் பார்க் படத்தின் முதலிரண்டு பாகங்களை இயக்கினார். நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தயாரிப்புச் செலவு - ரூ. 960 கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.