ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சென்னையில் ‘காக்கா முட்டை’ இயக்குநருடன் ஒரு கலந்துரையாடல்! இயக்குநர் வசந்த பாலன், எஸ். ராமகிருஷ்ணன் பங்கேற்பு

அந்த திரைப்படம் எப்படி உருவானது? எப்படி படமெடுக்கப்பட்டது? எந்த கேமராவில் என்ன பட்ஜெட்டில் படமெடுக்கப்பட்டது?...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:45 am

சநகன்

‘காக்கா முட்டை’ படம் தொடர்பாக அப்பட இயக்குநர் மணிகண்டன் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. வருகிற புதன் கிழமை (ஜூன் 17) அன்று சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த பாலன்,  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இதுதொடர்பாக இயக்குநர் வசந்த பாலன் அறிவித்திருப்பதாவது:

காக்கா முட்டை படம் பார்த்து வந்ததில் இருந்து என் இரவுகளை அந்த படம் களவாடிக்கொண்டே இருக்கிறது.

அந்த திரைப்டத்தின் கதை எப்படி எழுதப்பட்டது? அந்த திரைப்படத்தின் சிறுவர்கள் பாட்டி மற்ற உதிரி கதாபாத்திரங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? அந்த திரைப்படம் எப்படி உருவானது ?

எப்படி படமெடுக்கப்பட்டது? எந்த கேமராவில் என்ன பட்ஜெட்டில் படமெடுக்கப்பட்டது?என்பது போன்ற பல கேள்விகள்.

அதனால் காக்காமுட்டை தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இயக்குநர் மணிகண்டனுடன் நிகழ்த்தலாம் என்ற யோசனை வந்தது.

வருகிற 17.6.2015 புதன்கிழமை மாலை 6 மணிக்கு கேகேநகரில் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகே உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து நடக்க இருக்கிறது. நான் கலந்து கொண்டு பேசுகிறேன். எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.

காக்காமுட்டை திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டன் கலந்து கொள்கிறார். அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் அழைக்கிறேன்.

***

இந்தக் கலந்துரையாடல் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணையத்தளத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காக்கா முட்டை மிகச்சிறந்த திரைப்படம். நேற்றிரவு இயக்குநர் மணிகண்டனைச் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பாக  இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உடன் மணிகண்டன்  என் வீட்டிற்கு வந்து புதிய திரைப்பட முயற்சிகள் குறித்து உரையாடியது நினைவிருக்கிறது. அப்போது மணிகண்டன் தனது விண்ட் என்ற குறும்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்கும்படி சொன்னார். மிகச்சிறந்த குறும்படமது.

இன்று உலகத்தரமிக்க  திரைப்படம் ஒன்றை இயக்கி பெரும் வெற்றியைத் தொட்டிருக்கிறார். பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு பாராட்டுகளை குவித்து வருகிறது. இயக்குநர் மணிகண்டனுக்கும் தயாரிப்பாளர்களான  தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற  17.6.2015 புதன்கிழமை மாலை 6 மணிக்கு  டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து நடைபெற உள்ளது. இதில் நானும் இயக்குநர் வசந்தபாலனும் உரையாற்றுகிறோம்.

அதைத் தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டனுடன் கலந்துரையாடல் நடைபெறும்.

நாள்  :புதன் கிழமை 17.06.15

நேரம் : மாலை 6 மணி

இடம்:  டிஸ்கவரி புக் பேலஸ்

6, மகாவீர் காம்ப்ளெக்ஸ் முதல்தளம், முனுசாமி சாலை,

மேற்கு கே.கே .நகர், சென்னை 78.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.