ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சூர்யாவின் ‘மாசு’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

கதைக்கரு பழிக்குப் பழி வாங்குவதாக உள்ளதால் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:44 am

சநகன்

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள், ஆங்கில வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாசு படத்தை 7 பேர் அடங்கிய தேர்வுக்குழு பார்வையிட்டு கீழ்க்கண்ட குறைகளைச் சொல்லியுள்ளது.

1) படத்தில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

2) கதைக்கரு பழிக்குப் பழி வாங்குவதாக உள்ளதால் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.

3) அதிகமான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இக்காரணங்களால் மாசு படம் வரிவிலக்குக்குத் தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளார்கள். ஏழு உறுப்பினர்களும் கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதற்குப் பரிந்துரை செய்யவில்லை என்பதால் மாசு படத்துக்கு வரிவிலக்கு அளிக்க அரசு மறுத்துள்ளது.

படத்தைப் பார்வையிட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரை விவரங்கள்:

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.