நிகழ்ச்சி இயக்குநர்களில் ஒருவரான ரிச்செர்ட் பெனா கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் மணி ரத்னம். இவரது திரைப்படங்கள் சிறப்பான காட்சியமைப்புகளுக்காகவும், சிறந்த பொழுதுபோக்காகவும் அதே சமயம் அரசியல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களாக இருக்கும். வணிகத் திரைப்படம், கலைப்படம், அரசியல் படம் என்று காலகாலமாக திரைப்படங்களை பாகுபடுத்திக் கொண்டிருக்கும் விமரிசகர்களின் கூற்றுக்களைப் பொய்ப்பிக்கும் வகையில் மணி ரத்னத்தின் படங்கள் இவற்றின் அத்தனை கூறுகளை ஒருங்கிணைத்தே இருக்கும். மணி ரத்னம் சினிமா உலகின் ஒரு அரிய பொக்கிஷம். இந்த நிகழ்ச்சியில் அவருடைய புகழ்மிக்க படங்களை 35 எம் எம் மிகப் பெரிய திரையில் திரையிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார்.