வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ரூ. 5 கோடி கேட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு!

எங்கள் மீது தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் கார்த்திக் சுப்புராஜ் மீது நிறுவனத்தின் சார்பாக...

News image
Updated On :11 ஜூலை 2015, 10:59 am

ஜிகர்தண்டா' படத்தின் மொழிமாற்று உரிமம் தொடர்பான பிரச்னையில் ரூ. 5 கோடி கேட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சித்தார்த்-லட்சுமி மேனன் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தை தயாரித்த ‘பைவ் ஸ்டார் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிகர்தண்டா தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்குத் தெரியாமல் அந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை விற்க முயல்வதாகவும், அப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும் அந்த வகையில் தனக்குச் சேரவேண்டிய சம்பளப் பாக்கி மற்றும் நஷ்டஈடாக ரூ. 40 லட்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் கார்த்திக் சுப்புராஜ். ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிமாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் விற்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவும் வாங்கியிருந்தார். இதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். தடை உத்தரவை நீக்கக்கோரி கேட்டுக்கொண்டிருந்தார்.

ஜிகர்தண்டா படப்பிடிப்பினை வேண்டுமென்றே தாமதப்படுத்திய வகையில் ரூ. 1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் எங்கள் நிறுவனத்தை கார்த்திக் சுப்புராஜ் இழிவுபடுத்தும் விதமாக செய்திகள் பரப்பியதால் தெலுங்கு டப்பிங் உரிமையை இன்று வரை விற்கமுடியவில்லை. இந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கெனவே எங்களுக்கு கொடுத்துவிட்டார். மேலும் தடை உத்தரவையும் சென்னை நீதிமன்றம் நீக்கி உள்ளது. எங்கள் மீது தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வரும் கார்த்திக் சுப்புராஜ் மீது நிறுவனத்தின் சார்பாக ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.