எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிவகார்த்திகேயன் படத்துக்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு!

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரபலமானவர்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:16 am

எழில்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நாளுக்கு நாள் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது. அதன் அடுத்தக் கட்டமாக சிவகார்த்திகேயனின் படத்துக்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். பாக்கியராஜ் கண்ணன், இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரபலமானவர்கள். ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத், சவுண்ட் டிசைனிங் - ரெஸூல் பூக்குட்டி,  சிறப்பு மேக்கப் - 'ஐ' படத்தில் பணியாற்றிய 'வீடா' நிறுவனத்தைச் சேர்ந்த சீன் ஃபுட், படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன், கலை இயக்குநர் - முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு, ஆடை வடிவமைப்பாளர் - அனு பார்த்தசாரதி என ட்விட்டர் வழியாக படத்தைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கதாநாயகி பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிரமாண்டமான படையுடன் படத்தை ஆரம்பித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.