நடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் எதிர்பாராதவிதமாக ரத்தானது. அதன்பிறகு நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. கைவசம் ஏராளமான படங்கள்.
கவலைகளை மறந்து நடிப்பில் மும்முரமானது எப்படி? திருமணம் ரத்தானது ஏன் போன்ற கேள்விகளுக்கு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
திருமணம் ரத்து போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் பலரும் வருத்தத்தில் இருப்பார்கள். ஆனால் நான் அவ்வளவு சுலபமாகப் பாதிக்கப்பட மாட்டேன். நான் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்பவள். மனதும் மூளையும் என்ன சொல்கிறதோ அதன்படி முடிவுகளை எடுப்பவள்.
என் திருமணம் ரத்தானது குறித்து வந்த வதந்திகளை நான் கண்டுகொள்ளவில்லை. என் அம்மா மட்டுமே என் வாழ்க்கையின் முக்கியமான நபர். வேறு யாருக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லை. ஒருநாள் நிச்சயம் செய்துவிட்டு அடுத்தநாள் அது ரத்தானதால் மக்கள் குழப்பமடைந்து பலவற்றையும் ஊகிக்கத்தான் செய்வார்கள்.
என்னால் இந்தப் பிரிவைப் பற்றி நிறைய சொல்லமுடியும். அதைப் பற்றி பேசவேண்டாம் என்றும் நினைக்கவில்லை. ஆனால் இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களை இந்தப் பிரச்னைக்குள் இழுக்க விரும்பவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்தகாலத்தை நினைக்க விரும்பவில்லை.
இப்போதும் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. சமூகத் தேவைக்காக திருமணம் செய்யவேண்டும் என்பதில்தான் உடன்பாடு இல்லை. சமூகத்துக்காக யாரும் திருமணம் செய்யக்கூடாது, அதனால் பலர் அவதிப்படுவதை நான் பார்த்துள்ளேன். அன்பின் காரணமாகத்தான் ஒருவரைத் திருமணம் செய்யவேண்டும். வேறு காரணங்களுக்காக அல்ல. எனக்கேற்ற துணையை 25 வயதில் சந்தித்திருந்தால் அப்போதே திருமணம் செய்திருப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


