ஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிக்க காரணம் என்ன என்பதை யட்சன் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் பா. விஜய் கூறினார்.
ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்து விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் 'யட்சன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் கூறியதாவது:
‘நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து பணிபுரியும் எட்டாவது படம் இது. எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் நான் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒரு நட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போவதில்லை. நண்பர்களைப் பார்க்கப் போவது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது புரிகிறது. அவர், நட்புக்கு அதிக மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர். அதனால்தான்.
இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை. நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் ,'சர்வம்' படத்துக்குப்பிறகு இந்தப்படமும் பெரிய வெற்றியடையும்’ என்றார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பேசும்போது, ‘விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார், என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் அவரிடம் பழகினால் நமக்கும் வந்து விடும். அவரை பள்ளி நாள்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர்.’ என்றார்.
கிருஷ்ணா பேசும் போது ‘என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள். இனி கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படங்களும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் 'நேரம் வரும்போது நாம் இணையலாம் 'என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்துள்ளது. 'கழுகு' படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


