தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் முதல் ஆளாக இணைந்த டிடி!

மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் தனக்கு வழங்கப்பட்ட...

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 10:49 am

மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை வைத்து கலாம் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். இவருடைய அறக்கட்டளையில் பிரபல தொகுப்பாளர் டிடியும் இணைந்துள்ளார்.

‘ரசிகர்கள் தரும் பணத்தை அவர்களுக்கு திருப்பி தருகிறேன். எனக்கு முன் பணமாக கிடைத்த ஒரு கோடி ரூபாயை வைத்து கலாமின் காலச்சுவட்டில் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளேன். இதன் மூலமாக 100 இளைஞர்களின் படிப்புக்கு உதவப் போகிறேன். நூறு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்துவிடுவேன். அவர்கள் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவலாம் என்று விழாவில் கூறினார் லாரன்ஸ்.

அப்போது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த பிரபல தொகுப்பாளர் டிடி, அந்த நூறு பேரில் ஒருவராகத் தன்னைத் தேர்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதை லாரன்ஸும் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் டிடி. பள்ளிக் கட்டணம் செலுத்தமுடியாத மாணவர் யாராவது இருந்தால் தெரியப்படுத்தவும், லாரன்ஸின் கலாம் அறக்கட்டளை வழியாக அவர்களுக்கு உதவி அளிக்கப்படும். லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு அளித்த பணியை நான் ஆரம்பித்துவிட்டேன். அவருக்கு என் நன்றிகள் எனக் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.