டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ. 500 கோடி வசூலை எட்டிய பாகுபலி! ஆச்சரிய விவரங்கள்!

இந்த இரண்டு சாதனைகளுக்காகவும் திரையுலகினர் பாகுபலி படத்தை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்... 

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:20 am

எழில்

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள். ராஜமெளலி இயக்கியுள்ளார். வசூலில் நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்தும் இந்தப் படம், இப்போது இரு புதிய சாதனைகளைச் செய்துள்ளது.

முதல் 2 நாள்களில் 100 கோடி வசூலைத் தொட்டு தனது சாதனையை ஆரம்பித்த பாகுபலி, அடுத்ததாக 5 நாள்களில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிய முதல் படம் என்கிற அடுத்தச் சாதனையை நிகழ்த்தியது. அதன்பின்னர், முதல் 10 நாளில் 355 கோடி ரூபாயை வசூலித்த படம் என்கிற நம்பமுடியாத சாதனையையும் செய்தது. அதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயின.

இப்போது புதிதாக இரு சாதனைகள். 

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி, யாரும் எதிர்பார்க்காத வசூலைப் பெற்றுள்ளது. முதல் 5 நாளில் ரூ. 35 கோடியைத் தொட்டபோது 100 கோடி வசூலைப் பெறுமா என்கிற கேள்வி எழுந்தது. அது இப்போது உண்மையிலேயே சாத்தியமாகியுள்ளது.

ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூலான படம் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது பாகுபலி. இதற்கு முன்னர் எந்திரன் தான் இந்தப் பிரிவில் முதலிடத்தில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை கிடைத்த வசூலோடு இதுவரை ஹிந்தி பாகுபலி மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.  இதன் இன்னொரு சாதனைதான் உச்சபட்சம்!

Story image
Story image

உலகம் முழுக்க 4000 திரையரங்குகளில் வெளியான பாகுபலி, ரூ. 500 கோடி வசூலைத் தொட்டு சிகரத்தை எட்டியுள்ளது. ஹிந்தி அல்லாத மற்ற மொழிப் படங்களில் அதிகம் வசூலித்த படம் இதுதான். இதனால் இந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. பிகே (ரூ. 740 கோடி), தூம் 3 (ரூ. 524 கோடி) ஆகிய படங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்த இரண்டு சாதனைகளுக்காகவும் திரையுலகினர் பாகுபலி படத்தை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்.  இது ஷாருக் கானின் பாராட்டு:

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.