கிரகநிலை
ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், ராகு களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
27-06-2026 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்
எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.
தடைபட்டிருந்த புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் வருமானம் பல மடங்கு உயரும். மாற்றுக் கருத்துடையோரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். இழுபறியாக நடந்துகொண்டிருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று புதிய அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.
உங்களின் அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டு சரியாகச் செயல்படுத்துவீர்கள். உங்களின் தர்க்க ஞானத்தால் சண்டை சச்சரவுகளில் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் இணக்கமான உறவு தொடரும். சமுதாயப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி உங்கள் காரியங்களை தனித்தே செய்து முடிக்கவும்.
உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். ஆன்மிக விஷயங்களில் சிறப்பான ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய மொழிகளை அறிந்துகொள்ள பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.
நெடுநாள்களாக செய்யாமல் விட்டிருந்த நெடுந்தூரப் பயணங்களைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். அவப்பெயர்களிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போர் இந்தக் காலகட்டத்தில் வசதியான இல்லத்திற்கு மாறுவார்கள்.
உத்யோகஸ்தர்கள்
பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும்.
வியாபாரிகள்
போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் பெருகும். மற்றபடி புதியவர்களை நம்பிக் கடன் தர வேண்டாம்.
விவசாயிகள்
விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் விவசாய உபகரணங்களுக்கு செலவுகளைச் செய்ய நேரிடும். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்
பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும்.
கலைத்துறையினர்
எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். ரசிகர்கள் சிறிது அலட்சியப்படுத்தினாலும் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.
பெண்மணிகள்
கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதி நிலவும். சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
மாணவமணிகள்
நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.
உத்திரம் - 2, 3, 4
வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு.
ஹஸ்தம்: வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.
சித்திரை - 1, 2
பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.
பரிகாரம்
புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
மலர் பரிகாரம்
“துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்
வள்ர்பிறை: திங்கள், புதன், வியாழன் தேய்பிறை: திங்கள், புதன்
தொடர்புடையது
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மீனம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கடகம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மிதுனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

