

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.
தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் பலம் பெற்றிருக்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.
கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
அரசியல்துறையினருக்கு கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் : 2, 3, 4, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

மாசி மாதப் பலன்கள் - மீனம்

இன்று பாராட்டு பெறப்போகும் ராசி எது? தினப்பலன்கள்!

வார பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

