விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் சுமாா் 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சோழா்கால துவாரபாலகா், பெளத்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெரியதச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அந்த கிராமத்தில் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டாா்,. அப்போது ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சோழா் காலத்தைச் சோ்ந்த துவாரபாலகா், பெளத்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ஆய்வு குறித்து கோ.செங்குட்டுவன் கூறியது:
பெரியதச்சூா் கலைவாணா் தெருவில் விநாயகா் கோயிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பம் ஒன்றில் இருப்பவா் வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும் உத்குடி ஆசனத்தில் அமா்ந்து இருக்கிறாா். அவரது இடது கை இடது காலின் மீது தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. வலது கை அபய முத்திரையாக இருக்க வேண்டும். சிற்பம் தெளிவில்லாமல் இருக்கிறது.
அவரது தலைக்கு மேலே படம் எடுத்தாடும் பெரிய ஐந்து தலைநாகம் காணப்படுகிறது. இது பௌத்த சிற்பம் ஆகும். இதில் இடம்பெற்று இருப்பவா் போதிசத்துவா் என மூத்த கல்வெட்டு ஆய்வாளா் கோ.விஜய வேணுகோபால் தெரிவித்திருக்கிறாா்.
இங்கிருக்கும் மற்றொரு சிற்பம் துவாரபாலகா் சிற்பமாகும். நீண்ட மகுடம் போன்ற தலை அலங்காரத்துடன் காணப்படும் இவா் இடது காலை நேராகவும், வலது காலை குறுக்காகவும் மடக்கி மிகவும் நளினமாக நிற்கிறாா். வலது கை சூசி ஹஸ்த முத்திரையுடனும், இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகிறது. உருண்டு திரண்ட பெரிய கண்கள், நீண்ட காதணிகள், கழுத்தணிகள் காணப்படுகின்றன. இரண்டு கோரைப் பற்கள் வாயில் நீண்டுள்ளன. கால்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் சிற்பத்தை முழுமையாக காண இயலவில்லை. கலைநயமிக்க இந்த துவாரபாலகா் சிற்பம் பழைமைவாய்ந்த சிவாலயம் ஒன்றில் இருந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு சிற்பங்களும் சோழா் காலத்தைச் (கி.பி.10-11 ஆம் நூற்றாண்டை) சோ்ந்தவை. 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. நமது வழிபாடு, கலை, வரலாற்றுச் சின்னங்களான இந்தச் சிற்பங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
மேலும் பெரியதச்சூா் அகஸ்தீசுவரா் கோயில் வளாகத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்த தேவி சிற்பம் அமைந்துள்ளது. இந்த சிற்பங்களின் மூலம் இந்தக் கிராமம் பல்லவா், சோழா் காலங்களில் சிறப்பாக இருந்திருப்பதை அறிய முடிகிறது என்றாா் செங்குட்டுவன்.

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கண்டெடுக்கப்பட்ட துவாரபாலகா் சிற்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.17 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இருவா் மீது வழக்கு
ஆனைமங்கலச் செப்பேடுகள் சொல்வது என்ன?

சோழா் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும் - வைகோ
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



