திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 10:48 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடமும், முதல் தலைமுறை வாக்காளா்களிடமும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ரங்கோலி கோலம் வரைதல் நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா.வெங்கடேசுவரன், மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பழனி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.