மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 8:07 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னசெவலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கோவிந்தன்(48), லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரேணுகா(38). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகும் நிலையில், 3 மகன்கள் உள்ளனா்.

தம்பதியினரிடையே கடந்த 3 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கோபித்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை ரேணுகா அந்தப் பகுதியிலுள்ள தோப்புக்கு சென்று விட்டு திரும்பிய போது, அங்கு மறைந்திருந்த கோவிந்தன் அவரை வழிமறித்து கல்லால் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த ரேணுகாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கோவிந்தனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.