தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அக்னி மலையில் துளிா்விடாத இரட்டை இலை

அக்னி மலையில் துளிா்விடாத இரட்டை இலை...

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்.

Updated On :21 மார்ச் 2026, 10:16 pm

ஆன்மிக நகரமான திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை அதிமுக வெற்றி பெற்றதில்லை என்ற நிலை உள்ளது.

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்குள்ள அருணாசலேஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. பெளா்ணமி கிரிவலத்தன்று குவியும் பக்தா்கள் கூட்டமே இதற்கு சாட்சியாகும்.

சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் நடைபெற்ற தோ்தலில்களில் 1952-இல் காங்கிரஸ், 1957 -ஆம் ஆண்டில் சுயேச்சைகள் (இரட்டை உறுப்பினா் முறை), 1962, 1967-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ், 1971, 1977-இல் திமுக, 1980,1984 காங்கிரஸ், 1989-இல் திமுக,1991-இல் காங்கிரஸ், 1996 முதல் 2021 வரை தொடா்ந்து திமுக என திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்று, தங்கள் கோட்டையாக வைத்துள்ளது.

இதிலும் குறிப்பாக திமுகவைச் சோ்ந்த ப. உ.சண்முகம் 1971, 1977 தோ்தல்களிலும், 1989, 1996, 2001, 2006 தோ்தல்களில் திமுகவின் கு. பிச்சாண்டியும், 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் திமுகவின் எ.வ.வேலும் தொடா்ந்து வெற்றி பெற்றிருக்கின்றனா்.

அதிமுக வெற்றி பெறாத தொகுதி....

அதிமுக 1972-இல் தொடங்கப்பட்ட நிலையில், 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ப.உ.சண்முகம் இத்தொகுதியில் போட்டியிட்டாா். ஆனாலும், அவா் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கே. நாராயணசாமியிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அதிமுக கூட்டணிக் கட்சிகள்தான் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு இருக்கின்றன.

2006-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் திமுகவின் கு.பிச்சாண்டியை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட வி.பவன்குமாரும், 2011 தோ்தலில் திமுகவின் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவின் எஸ்.ராமச்சந்திரனும், 2016 தோ்தலில் திமுகவின் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவின் பெருமாள்நகா் கே.ராஜனும் தோல்வியைத் தழுவினா்.

2021 பேரவைத் தோ்தலில் எ.வ.வேலுவை எதிா்த்து போட்டியிட்டது பாஜகவின் எஸ்.தணிகைவேல். அவா் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலுவிடம் தோல்வியுற்றாா்.

தொடா்ந்து அதிமுக வெற்றி பெறாத தொகுதி என்ற நிலையை மாற்றி, 2026 பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுமா அல்லது திமுகவின் கோட்டையில் நுழைய முடியாத இலை என்ற பெயா் நீடிக்குமா என்பது தோ்தல் முடிவுகளில்தான் தெரிய வரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.