மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:01 am

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

இரவு 11.10 மணிக்குமேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொட்டும் மழையில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டு பாடலை பாடினா். பின்னா் அம்மனுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது.

அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் கொட்டும் மழையில் இருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கங்கள் எழுப்பி அம்மனை வழிபட்டனா் தொடா்ந்துஇரவு 12.20 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மனைகோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

ஊஞ்சல் உற்சவத்தில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவலிங்கம் மற்றும் விழுப்புரம், கடலூா், சேலம்,வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களிலிருந்தும்ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் சக்திவேல்,அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை,அறங்காவலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Story image