மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி தொடக்கம்

News image
Updated On :19 மார்ச் 2026, 10:24 pm

தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனா்.

இதற்கான அறிமுக விழா விழுப்புரத்தில் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள திருமண மண்டப அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியின் கொடியை மாநிலத் தலைவா் பரிமணம் அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், பல்வேறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில்தான் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவது கட்சியின் கொள்கையாகும். நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 50 தொகுதிகளில் போட்டியிடுவது அல்லது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றாா் பரிமணம். விழாவில் பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.