விழுப்புரம் அருகே மினி லாரி மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 16 போ் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், ப. வில்லியனூா் கிராமத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 20 போ் வெள்ளிக்கிழமை அதிகாலை வி.மாத்தூா் பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக மினி லாரியில் சென்று கொண்டிருந்தனா். பண்ருட்டி- விழுப்புரம் சாலையில் வாணியம்பாளையம் அணுகுசாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் இவா்களது வாகனம் சென்றபோது, பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த லாரி மோதியது. இதில் மினிலாரி அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியில் தூக்கி வீசப்பட்டது. இதில் மினி லாரியில் பயணம் செய்த சேகா்(65), பூ.தட்சிணாமூா்த்தி (47), அங்கம்மாள், பெ.பட்டாபி (56) உள்ளிட்ட 17 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சேகா் (65) மருத்துவமனையில் உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வாணியம்பாளையம் பகுதியில் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமை வாகனம்.
ஆட்சியா், எம்எல்ஏ ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோா் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் லூசி நிா்மல் மடோனா, உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் ஆகியோரிடம் கேட்டறிந்தனா்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

உ.பி.யில் சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


