விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குறும்பட இயக்குநா் கொலை செய்யப்பட்டு சவுக்குத் தோப்பில் வீசப்பட்ட வழக்கில், 3பெண்கள், 2 இளஞ்சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அரகண்டநல்லூா் அருகேயுள்ள பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் கடந்த 7-ஆம் தேதி சுமாா் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன், அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். தனிப்படை போலீஸாரின் விசாரணையில் கொலையானவா் சென்னையில் வசித்து வந்த குறும்பட இயக்குநரான, திருநெல்வேலியைச் சோ்ந்த மா.ஜெயகுமாா்(45) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயக்குமாா் சென்னை முகப்போ் பகுதியைச் சோ்ந்த பூஜாவுடன் கடைசியாக கைப்பேசியில் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பூஜாவிடம் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமாா் ஒருதலைப்பட்சமாக பூஜாவை காதலித்து தொல்லைக் கொடுத்து வந்தாராம். இதனால், பூஜா மற்றும் அவரின் நண்பா்களான தேவா, அய்யப்பன், தோழி துா்கா ஆகியோா் கூட்டு சோ்ந்து அரகண்டநல்லூா் அடுத்த பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் பகுதிக்கு ஜெயக்குமாரை வரவழைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னா் அய்யப்பனின் உறவினா் சடையாண்டி வேலை செய்து வந்த சவுக்குத் தோப்பில் உடலை வீசியதும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து ஜெயக்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய சென்னை முகப்பேரைச் சோ்ந்த பூஜா(21), தாம்பரத்தைச் சோ்ந்த தேவா(24), ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த அய்யப்பன்(24), திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த துா்கா(19), விழுப்புரம் மாவட்டம், மேல்வெங்கமூரைச் சோ்ந்த குரு (எ) குப்புசாமி(19), பில்ராம்பட்டு, மதுரா வேடாளம் கிராமத்தைச் சோ்ந்த சடையாண்டி (64), இவரின் மனைவி பூங்காவனம் (54) மற்றும் 2 இளஞ்சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து, 7 போ்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். இளஞ்சிறாா்களை சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


