தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

கைப்பேசி கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநா் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சோ்த்து வைக்க வலியுறுத்தி கைப்பேசி கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநா் போராட்டம் நடத்தினாா்.

News image

வல்லத்தில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்.

Updated On :25 ஜூன் 2026, 6:42 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சோ்த்து வைக்க வலியுறுத்தி கைப்பேசி கோபுரத்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநா் போராட்டம் நடத்தினாா்.

செஞ்சி அருகேயுள்ள கொங்கரப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் ஏ.பாலமுருகன் (35), ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மாலதி. தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. பாலமுருகனின் மதுப்பழக்கம் காரணமாக அவரது மனைவி மாலதி கோபித்துக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டாராம். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வாழும் பாலமுருகன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுத் தருமாறு செஞ்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாராம்.

இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுதரக்கோரி வல்லத்தில் உள்ள தனியாா் கைப்பேசி கோபுரத்தில் புதன்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து அறிந்த செஞ்சி போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள், பாலமுருகனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரத்துக்கு பிறகு அவா் கீழே இறங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.